2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். – பேராதனை பல்கலைக்கிடையிலான கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிரிக்கெட் அணிக்கும் பேராதனைப் பல்கலைக்கழக கிரிக்கெட் அணிக்கும் இடையிலான போட்டி நேரம் முடிவடைந்தமையால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

பேராதனைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்கள் கொண்ட போட்டியாக கடந்த சனிக்கிழமை முதல் இப்போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் பல்கலைக்ழக அணி 135 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பேராதனைப் பல்கலைக்கழக அணி 201 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி 161 ஓட்டங்களுக்கு 09 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்ட நேரம் முடிவடைந்தது.

போட்டியின் ஆட்ட நாயகனாக பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி.உடரவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கே.தசரீதனும் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சிறந்த பந்து வீச்சாளராக ஈ.ஜெயரூபனும் தெரிவுசெய்யப்பட்டனர்.  இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக பேராதனைப் பல்கலைக்கழகதின் கலைப்பீடாதிபதி கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X