2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டிகள்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அரசாங்க திணைக்களுக்கான அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான இறுதி விளையாட்டுப் போட்டி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

முள்ளியவளை வித்தியானாந்தா கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம், ஆண்களுக்கான கரப்பந்தாட்டம், கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் அலுவலகம் சம்பியனைப் பெற்றுக்கொண்டதுடன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் முல்லைத்தீவு சுகாதார சேவைகளுக்கான பிராந்திய பணிப்பாளர் திணைக்களம் சம்பியனை பெற்றுக்கொண்டதுடன், முல்லைத்தீவு வீதி அபிவிருத்தி அதிகாரசபை இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் முல்லைத்தீவு தபால் திணைக்களம் சம்பியனை பெற்றுக்கொண்டதுடன், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் சம்பியனை பெற்றுக்கொண்டதுடன், துணுக்காய் பிரதேச செயலாளர் அலுவலகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X