2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யுனைட்டட் கழகம் சம்பியன்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 09 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிஜாஸ்)

ஹோல்சிம் கம்பனியின் அனுசரணையுடன் நடைப்பெற்ற புள்ளியடிப்படையிலான கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யுனைட்டட் கழகம் சம்பியனாகி வெற்றிக்கிண்ணத்தனையும் இருபதாயிரம் ரூபா பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டது.

இன்று புத்தளம் நகரசபை மைதானத்தில் நடைப்பெற்ற புத்தளம் லீக் மற்றும் யுனைட்டட் கழகங்களுக்கிடையிலான நடைப்பெற்ற கண்காட்சி போட்டியினையடுத்து சம்பியன் கிண்ணம் மற்றும் பணப்பரிசுகளும் வெற்றி அணிகளுக்கு வழங்கப்பட்டன.

இச்சுற்றுப் போட்டியில் 2ஆம் இடத்தினை கற்பிட்டி பேர்ள்ஸ் அணியும் 3ஆம் இடத்தினை நியூபிரண்ட்ஸ் கழகமும் பெற்றுக்கொண்டதுடன் இவர்களுக்கு முறையே 15,000 ரூபாவும், 10,000 ரூபாவும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேவேளை இன்று நடைப்பெற்ற கண்காட்சி போட்டியில் புத்தளம் லீக் அணி 5 - 2 என்ற கோல்களின் அடிப்படையில் வெற்றிப்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X