2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வலய ரீதியாக தெரிவான உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 11 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கையின் பாடசாலைகளுக்கு இடையே விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் முகமாக ஜனாதிபதியினால் மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட ஆறு விளையாட்டுக்களை மேம்படுத்தும் நோக்கில் கல்வி வலய ரீதியாக  உடற்கல்வி ஆசிரியர்கள் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் ஆறு விளையாட்டுக்களுக்குமாக தெரிவு செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களின் விபரங்கள் வருமாறு,

றக்பி - வவுனியா கோவில் குஞ்சுக்களம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த  எஸ்.காந்தரூபன்.

கால்பந்தாட்டம் - வவுனியா தாரணிக்குளம் கணேஸ் வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ் முகுந்தன்.

ஜிம்னாஸ்ரிக் - வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தைச் சேர்ந்த டபிள்யூ.ஜெயநேசன்.

கரப்பந்தாட்டம் - வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஆக்.இராஜகாந்தன்.  

வலைப்பந்தாட்டம் - வவுனியா தவசியகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த கே.செந்தில் குமரன்.

மெய்வன்மை - வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஜே.சுதாத்தரன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X