2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட் கழகம் சம்பியன்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 13 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் நகர சபைத்தலைவர் சவால் வெற்றிக்கிண்ண கால்ப்பந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்று நடைப்பெற்றது. யுனைட்டெட் கழகத்திற்கும் நியூ ஸ்டார் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்களினை அடித்த நிலையில் போட்டி நேரம் முடிவடைந்தது.

அதனையடுத்து நடைபெற்ற பெனல்டி உதை மூலம் 3:0 என்ற கோல் வித்தியாசத்தில் யுனைட்டெட் கழகம் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கான வெற்றிக் கிண்ணத்தினையும் பணப் பரிசினையும் புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் யுனைட்டெட் கழக அணித்தலைவருக்கு வழங்கினார்.

புத்தளம் நகரசபை மைதானம் 175 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதை முன்னிட்டு அதனை பெற்றுத்தந்த புத்தளம் சுதந்திர கட்சி அமைப்பாளரும், நகர சபைத்தலைவருமான கே.ஏ.பாயிஸினை கௌரவித்து புத்தளம் கால்ப்பந்தாட்ட கழக அணிகளுக்கிடையில் மேற்படி சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X