2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி அமைச்சு அணி சம்பியன்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)


ஆளுநர் வெற்றிக் கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மேற்படி போட்டிகளில் பூப்பந்தாட்டப் போட்டிகள் சென்.ஜோன்ஸ் கல்லூரி பூப்பந்தாட்டத் திடலில் நடைபெற்று வந்தது.

பூப்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெற்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் உள்ளூராட்சி அணியினை எதிர்த்து கல்வி அமைச்சு அணி மோதியது. இப்போட்டியில் உள்ளூராட்சி அமைச்சு அணி இரண்டு தனிநபர் செற்களையும், ஒரு இரண்டையர் செற்றினையும் வென்று சம்பியனாகியது.

ஆண்களுக்கு இறுதிப்போட்டியிலும் உள்ளூராட்சி அணியும் கல்வி அமைச்சு அணியும் மோதியது. இப்போட்டியில் மூன்று தனிநபர் செற்களையும் கைப்பற்றிய உள்ளூராட்சி அணி சம்பியனாகியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .