2025 நவம்பர் 19, புதன்கிழமை

சமநிலை தவிர்ப்பு உதையில் றெட் றேஞ்சரை வென்ற நாமகள்

Super User   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    நா.நவரத்தினராசா

அராலி பாரதி விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 07 பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி திங்கட்கிழமை (08) பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதி போட்டியில் மானிப்பாய் றெட் றேஞ்சர் விளையாட்டுக்கழகமும் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழகமும் மோதிக் கொண்டன.

ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறவில்லை.

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழக அணி, 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X