2025 நவம்பர் 19, புதன்கிழமை

கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு

Super User   / 2014 செப்டெம்பர் 14 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    குணசேகரன் சுரேன்

கொக்குவில் சிவகுரு விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைகலப்பில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென்பதுடன், மேலதிக பொலிஸார் மைதானத்துக்குள் இறக்கப்பட்டு கைகலப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

இது பற்றி தெரியவருவதாவது,

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி புத்தூர் எவறெஸ்ட் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் ஊரெழு றோயல் அணியும் நாவாந்துறை சென். மேரிஷ; அணியும் மோதின. போட்டி ஆரம்பித்து அடுத்த நிமிடமே ஊரெழு றோயல் அணியின் எஸ்.தர்மகுலநாதன் முதல் கோலை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

முதல் பாதியாட்டத்தில் றோயல் அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் சென். மேரிஷ; அணியின் எம்.யூட் ஒரு கோலை பெற்றுக்கொடுக்க போட்டி சமநிலையானது.

எனினும் சமநிலையை தகர்த்த றோயல் அணியின் எஸ்.கானுஜன் ஒரு கோல் அடித்தார். இறுதியில் றோயல் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதனால், ஆத்திரமடைந்த மேரிஷ; அணி ரசிகர்கள் மைதானத்திற்குள் கலகம் விளைவித்தனர். பொல்லுகள், கொண்டு ஊரெழு அணியின் வீரர்கள் ரசிகர்களை அடிக்க தொடங்கினார்கள். தொடர்ந்து இது கைகலப்பாக மாறவே, கல்வீச்சு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, மைதானத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு கைகலப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X