2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பளுதூக்கலில் அசத்திய வடமாகாண வீரர்கள்

Super User   / 2014 செப்டெம்பர் 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    குணசேகரன் சுரேன்

தேசிய பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டியில் 4 முதலிடங்கள் 7 இரண்டாமிடங்கள் மற்றும் 7 மூன்றாமிடங்கள் என வடமாகாண வீர, வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளதாக வடமாகாண பிரதி கல்விப்பணிப்பாளர் க.சத்தியபாலன் புதன்கிழமை (17) தெரிவித்தார்.

பளுதூக்கல் போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையில் அறநாயக்க டிபிற்றியா ராஜகிரி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றன,

17 வயதுப்பிரிவு 56 கிலோ எடை ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வீரன் ரி.விதுசன், 17 வயதுப்பிரிவு 63 கிலோ எடை பெண்களுக்கான போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியை சேர்ந்த வி.அர்ஷpகா, 19 வயதுப்பிரிவு 84 கிலோ எடை ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் அச்சுவேலி மத்திய கல்லூரியை சேர்ந்த கே.துசாந்த், 19 வயதுப்பிரிவு 63 கிலோ எடை பெண்களுக்கான போட்டியில் யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை சேர்ந்த ஜே.ஜே.பி.டெனுஜா ஆகியோர் முதலிடங்களை பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .