2025 ஜூலை 09, புதன்கிழமை

யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணி வெற்றி

George   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளத்தில் நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியில் யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணி மீண்டும் நடாத்திய அதிரடியான தாக்குதலில் புத்தளம் விம்பிள்டன் அணி நிலை குலைந்து போனது.

இந்த இரண்டாவது வெற்றியின் மூலம் யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணி 06 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றது.

இந்த ஆட்டமானது சனிக்கிழமை(27) மாலை புத்தளம் சாஹிரா தேசிய தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் நடாத்தி வரும் புள்ளிகள் அடிப்படையிலான கால்ப்பந்தாட்ட தொடரிலேயே இவ்விரு அணிகளும் நீண்ட காலத்துக்கு பிறகு சந்தித்து கொண்டன.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாவிட்டாலும் இரண்டாவது பாதியில் போட்டி  நிறைவு  பெறும் வேளை யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணியினரால் தொடர்ந்து 03 கோல்கள் பெறப்பட்டதன் மூலம் அவ் அணி 03 கோல்களினால் வெற்றி பெற்றது. எம்.இந்திஸார் 02 கோல்களையும், எம்.நிப்பு 01 கோலினையும் பெற்றனர்.

போட்டிக்கு  நடுவர்களாக  எம்.எஸ்.எம். ஜிப்ரி,ஓ.எம்.அஸாம், எம்.ஆர்.எம்.அம்ஜத் ஆகியோர் கடமையாற்றினர்.     

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .