2025 ஜூலை 09, புதன்கிழமை

புனரமைப்பு வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் கடந்தகால யுத்தம் காரணமாக கவனிப்பாரற்று கிடந்த மத்தியமுகாம் பிரதேசத்துக்கான பொது விளையாட்டு மைதானம், சுமார் 45 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை (11) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இவ் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 60 வருடங்களுக்கு மேல் மத்தியமுகாம் பிரதேசத்தில் நிலவிய மைதான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கென சுமார் 2 ஏக்கர் பரப்பிலான காடுகள் அழிக்கப்பட்டு மைதானம் அமைக்கும் பணியை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மத்தியமுகாம் கிராம சேவை உத்தியோகத்தர் ஜெ.மதன், தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான பி.எச்.பியசேன, நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக இணைப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் ஏ.ஆனந்தன், விளையாட்டு கழக உறுப்பினர்கள், இளைஞர்கள், பொது மக்கள் உள்ளிட்ட மேலும் பலரும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .