2025 ஜூலை 09, புதன்கிழமை

கால்பந்தாட்ட போட்டி சமநிலையில் முடிவு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


பலம் வாய்ந்த இரு அணிகளான புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணிக்கும் புத்தளம் விம்பிள்டன் அணிக்குமிடையில் நடைபெற்ற மற்றுமொரு கால்ப்பந்தாட்ட போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

புத்தளம் கால்ப்பந்தாட்ட சங்கம் நடாத்தி வரும் புள்ளிகள் அடிப்படையிலான இந்த போட்டி சனிக்கிழமை (11) மாலை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இடைவேளைக்கு முன்னதாக விம்பிள்டன் அணி தனது அணிக்கான முதலாவது கோலினை புகுத்தியது. எனினும் போட்டி நிறைவடைய ஓரிரு செக்கன்கள் மிகுதி  இருக்கும் தருவாயில் நியூ ஸ்டார்ஸ்  அணி அதிரடியாக ஒரு கோலினை புகுத்தியதால் 01:01 எனும் கோல் விகிதத்தில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

நியூ ஸ்டார்ஸ்  அணிக்காக எம். அவ்சாத் அலியும் விம்பிள்டன் அணிக்காக எம்.அம்மாரும் கோல்களை பெற்றனர்.

இதன்மூலம் இவ்விரு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்றுள்ளதோடு மொத்தமாக 4 புள்ளிகளோடு சமநிலை வகிக்கின்றன.

போட்டியின் நடுவர்களாக எம்.எஸ்.எம்.ஜிப்ரி, எம்.ஆர்.எம்.அம்ஜத், ஏ.ஏ.எம்.கியாஸ் ஆகியோர் கடமையாற்றினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .