2025 ஜூலை 09, புதன்கிழமை

வடமாகாண ஆளுநர் வெற்றிக்கிண்ணம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண ஆளுநர் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, புதன்கிழமை (10) தெரிவித்தார்.

யாழ்.பொது நூலகத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சுற்றுப்போட்டி, எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், இறுதிப்போட்டி ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஆரம்பம் மற்றும் இறுதிப்போட்டிகள் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்திலும், மிகுதி போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, பாடும்மீன், சென்.அன்ரனீஸ் விளையாட்டுக்கழகங்களின் மைதானங்களில் நடைபெறவுள்ளது.

வடமாகாணத்திலுள்ள 9 லீக்குகளையும் சேர்ந்த 18 அணிகள் பங்குபற்றவுள்ள இந்த சுற்றுப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு 1 இலட்சம் ரூபாயும், இரண்டாம் இடம்பெறும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசில் தொகையாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன், அதிக கோல் அடிக்கும் வீரர், சிறந்த கோல் காப்பாளர் ஆகியோர்களுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக ஆளுநர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .