2025 ஜூலை 09, புதன்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கான துடுப்பாட்டப் பயிற்சி முகாம்

Gavitha   / 2014 டிசெம்பர் 28 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா


இலங்கை கிரிக்கெட்டின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளின் 13, 15, 17, 19 வயது பிரிவு துடுப்பாட்ட அணிகளின் வீரர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், யாழ்.மத்திய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பமாகியது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் நிஸாந்த ரணதுங்க ஆகியோர் இந்த பயிற்சி முகாமை ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கை கிரிக்கெட்டின் அனுசரணையில் யாழ்.மாவட்ட விளையாட்டுக் கழங்களுக்கிடையில் நடத்தப்பட்ட மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டியில், முதலாம் இடத்தை பெற்ற நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம், இரண்டாம் இடத்தைப் பெற்ற யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றுக்கான வெற்றிக்கேடயங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் மழை பெய்து வருகின்ற காரணத்தால் கலந்துகொண்ட வீரர்களுக்கான உள்ளகப் பயிற்சிகள் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .