2025 நவம்பர் 19, புதன்கிழமை

மத்தியஸ்தர்களுக்கான தரப்படுத்தல்

Thipaan   / 2015 ஜனவரி 31 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கை கால்பந்து சம்மேளனம், கால்பந்து மத்தியஸ்தர்களுக்கான தரப்படுத்தல் மற்றும் இணைத்துக் கொள்வதற்கான பரீட்சைகள் எதிர்வரும் சனிக்கிழமை(07) கொழும்பு அமீர் அல்ஹீசைனியா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன. இதற்கு முன்னோடியாக உடல்தகுதி பரீட்சைக் நடத்தப்படுகின்றது.

கிழக்கு மாகாண விண்ணப்பதாரிகளுக்கான உடல் தகுதி பரீட்சை திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (31) நடத்தப்பட்டது. இதில் 160 மத்தியஸ்தர்கள் கலந்த கொண்டார்கள்.

இலங்கை கால்பந்து மத்தியஸ்தர் பணிப்பாளர் ஏ.எம்.யாப்பா தலைமையிலான குழுவினர் இவர்களுக்கான பரீட்சைகளை நடத்தினர்.

இதில் தகுதி பெறுவோர் எழுத்துப் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X