2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சுப்பர் ஓக்கிட் டைகரஸ் அணி சம்பியன்

Kogilavani   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா


சின்னப்பாலமுனை சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக்கழகத்தின் சுப்பர் ஓக்கிட் பிரிமியர் லீக் 2015 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், சுப்பர் ஓக்கிட் டைகரஸ் அணி சம்பியனாகியுள்ளது.


சுப்பர் ஓக்கிட் கழக வீரர்களின் திறனை விருத்தி செய்வதற்காக நடத்தப்படும் இத்தொடருக்கமைய, சுப்பர் ஓக்கிட் டைகரஸ், லயன்ஸ், ஈகிள்ஸ்;, வொரியர்ஸ் ஆகிய 4 அணிகளுக்கிடையில் இச்சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது.


இறுதி சுற்றுக்கு சுப்பர் ஓக்கிட் டைகரஸ்;, சுப்பர் ஓக்கிட் லயன்ஸ் ஆகிய அணிகள் தெரிவாகின.


விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.முஹாஜிரீன் தலைமையில் நடைபெற்ற இறுதி போட்டியில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதீன், கழகத்தின் உப தலைவர் எஸ்.எச்.தம்ஜீத், முகாமையாளர் எஸ்.எச்.முர்ஸித், கிரிக்கட் அணித்தலைவர் எம்.எச்.நிஸார்தீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரராக சுப்பர் ஓக்கிட் டைகரஸ் அணித் தலைவர் எஸ்.எம்.பர்ஹான் தெரிவானார்.


இதில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட அணி வீரர்களுக்கும் இரண்டாவதாக தெரிவான அணி வீரர்களுக்கும் கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .