George / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மண்டூர் 14 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி, வெள்ளிக்கிழமை (13) மாலை பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.புஸ்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அசியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், உட்பட, கல்வி அதிகாரிகள், அதிபர்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் குறிஞ்சி இல்லம் 615 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் முல்லை இல்லம் 602 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் மருதம் இல்லம் 588 பள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக் கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



11 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
1 hours ago