George / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
சென். ஜோன்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து மஹாஜனாக் கல்லூரி மோதிய கிரிக்கெட் போட்டியில், எஸ்.ஜெனிபிளமிங் சதத்தின் உதவியுடன் சென். ஜோன்ஸ் கல்லூரி, இனிங்ஸ் மற்றும் 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், 19 வயதுப்பிரிவு, பிரிவு 3 அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டி, மஹாஜனாக் கல்லூரி மைதானத்தில் கடந்த 13ஆம் திகதி நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற மஹாஜனா கல்லூரி அணி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. மைதானத்தில் நிலைத்து நின்ற துடுப்பாட்ட வீரர்களை விட பெவிலியன் திரும்பியவர்கள் அதிகமாக, அவ்வணி 24.5 ஓவர்களில் 80 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அணி சார்பில் ஜி.கபிலன் 21 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் சென். ஜோன்ஸ் அணி சார்பாக, கே.கபில்ராஜ், ஆர்.லோகதீஸ்வரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஆர்.பிரிசங்கர், வி.யதுசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்;களையும் வீழ்த்தினார்கள்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு, எஸ்.ஜெனிபிளமிங் சதமடித்து கைகொடுக்க 74.3 ஓவர்களில் அனைத்து விக்கெடடுக்;களையும் இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றது.
எஸ்.ஜெனிபிளமிங் 124, எஸ்.கபில்ராஜ் 53, பி.துவாரகசீலன் 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மகாஜன அணி சார்பாக, ஏ.ரசிகரன் 4, எஸ்.ஜெசிந்தன் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்கள்.
243 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸை துடுப்பெடுத்தாட களமிறங்கிய மகாஜனக் கல்லூரி அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க முற்பட்ட போதும் அது கைகொடுக்கவில்லை.
77.5 ஓவர்களில் 206 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் இறுதி வரை ஆட்டமிக்காமல் அணிக்காக போராடிய எஸ்.ஜெசிந்தன் 56, எஸ்.நிவாஸ் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் சார்பாக கே.கபில்ராஜ், ஆர்.லோகதீஸ்வரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்கள்.
7 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
27 minute ago