Kogilavani / 2015 பெப்ரவரி 19 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்திவரும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் மற்றும் பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணிகள் வெற்றிபெற்றன.
நெடியகாடு விளையாட்டுக்கழக மைதானத்தில் இந்த கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெறுகிறது.
கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணியை எதிர்த்து கரவைச்சுடர் விளையாட்டுக்கழகம் மோதியது.
இதில் சென்.மேரிஷ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அருள்தாஸ் நிதர்சன், அன்ரனி அன்ரன் சாள்ஸ் ஆகியோர் தலா ஒருகோல்களை சென்.மேரிஷ் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். கரவைச்சுடர் அணி சார்பாக என்.விக்னேஸ்வரன் கோலை, பெற்றுக்கொடுத்தார்.
இரண்டாவது போட்டியில் பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணியை எதிர்த்து கொற்றாவத்தை அன்பாலயம் அணி மோதியது.
அபாரமாக ஆடிய சென்.அன்ரனீஸ் அணி 7:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. யூ.கலிஸ்டன் 5 கோல்களையும் என்.மதுசன், எம்.பெனான்சியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றுக்கொடுத்தனர்.



10 minute ago
11 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
30 minute ago