2025 நவம்பர் 19, புதன்கிழமை

கால்ப்பந்தாட்ட களியாட்ட பயிற்சி முகாம்

Gavitha   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் ஏற்பாடு செய்த, பாடசாலை மாணவர்களிடையே கால்ப்பந்தாட்ட துறையின் அடிப்படை பயிற்சியை வழங்கும் பொருட்டிலான இரண்டாம் கட்ட 'கால்ப்பந்தாட்ட களியாட்ட பயிற்சி முகாம்' சனிக்கிழமை (21) காலை புத்தளம் சாகிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் வேண்டுகோளின் பேரில், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம் 2015ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியாக  நடாத்தவுள்ள இந்த கால்ப்பந்தாட்ட களியாட்ட பயிற்சி முதன் முதலில் புத்தளம் நகருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருட இறுதியில் 125 பாடசாலை மாணவர்கள் மற்றும் 25 பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்ட முதலாம் கட்ட பயிற்சியிலிருந்து தெரிவான மாணவர்கள் இந்த இரண்டாம் கட்ட பயிற்சியிலும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இந்த இரண்டாம் கட்ட கால்ப்பந்தாட்ட களியாட்ட பயிற்சி முகாமில், புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்குக்கு கட்டுப்பட்ட 20 பாடசாலைகளை சேர்ந்த 200 மாணவர்களும் 25 உடற்கல்வி போதனாசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதன் பிரதான பயிற்றுவிப்பாளராக, இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதி தொழில்நுட்ப பணிப்பாளரும் கால்ப்பந்தாட்ட களியாட்ட முகாமையாளருமான சமிந்த நீல் ஸ்டெயின்வோல் கலந்து கொண்டார். புத்தளம் இளைஞர் கால்ப்பந்தாட்ட அபிவிருத்தி இணைப்பாளர் எம்.எப்.எம். ஹுமாயூன், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளரும், புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்  செயலாளருமான ஜே.எம். ஜௌசி, புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் தலைவர் எம்.எச்.எம். சபீக் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X