Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 05 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக அணியை சேர்ந்த செபமாலைப்பிள்ளை ஜெனிபிளமிங் சதமடித்தார்.
வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் கடந்த 2005 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் அணியின் ஏ.மயூரதன் 122 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் சதம் எதுவும் பெறப்படவில்லை.
109 ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் வியாழக்கிழமை (05) காலை முதல் நடைபெற்று வருகின்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் பத்திநாதன் நிரோஜன் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை சேகரித்தது.
அதிரடியாக ஆடி ஜெனி பிளமிங் 196 பந்துகளில் 19 பவுண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களைப் பெற்று, ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
ஆரம்பத்தில் விக்கெட் கொடுக்காமல் ஓட்டங்கள் சேர்த்த சென்.ஜோன்ஸ் அணி, முதல்நாள் ஆட்டத்தின் 3 ஆவது செஸனில் விக்கெட்களை இழந்தது. சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 88 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
சஜீந்திரன் கபில்ராஜ் 50, அருளானந்தம் கானாமிர்தன் 33, பரமானந்தம் துவாரகசீலன் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சார்பாக, சிவராசா மதுசன் 22 ஓவர் பந்துவீசி 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், கணேசலிங்கம் நிதுசன், சிவபாலசுந்தரம் அலன்ராஜ்,சதாகரன் திரேசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025