Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 20 , பி.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான வர்த்தக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள், நாளையும் நாளை மறுதினதும், பியகமவிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டுத் தொகுதியில் இடம்பெறவுள்ளன. இப்போட்டிகள், 32ஆவது வருடமாக இம்முறை இடம்பெறவுள்ளன.
இலங்கை வர்த்தக மெய்வல்லுநர் சங்கத்தினால் நடாத்தப்படும் இத்தொடரில், இம்முறை 51 வர்த்தக அணிகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக 1,500 பேர் பங்குபற்றுகின்றனர்.
“மொத்தமாக, 380 தட, களப் போட்டிகள் இந்த இரண்டு நாள் போட்டிகளில் நடாத்தப்படவுள்ளன” என, வர்த்தக மெய்வல்லுநர் சங்கத்தின் செயலாளர் டொரன்டோ ஜெயசுந்தர தெரிவித்தார்.
சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு நடாத்தப்படும் இப்போட்டிகளில், சர்வதேசத் தகுதிபெற்ற அதிகாரிகளும் நடுவர்களும் கடமையில் ஈடுபடுகின்றனர்.
இப்போட்டிகளின் முடிவில், இவ்வருடம் இடம்பெறவுள்ள இரண்டு வெளிநாட்டுப் போட்டித் தொடர்களில் பங்குபற்றுவதற்கான வர்த்தக மெய்வல்லுநர் குழாமொன்று உருவாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதில், முதலாவது தொடராக சிங்கப்பூர் தொடரும், இரண்டாவது தொடராக இந்தியத் தொடரும் இடம்பெறவுள்ளது.
சிங்கப்பூர் தொடரில் 50 அங்கத்தவர்களைக் கொண்ட இலங்கை அணி பங்குபற்றுமென எதிர்பார்க்கப்படுவதுடன், இந்தியத் தொடரில், இவ்வாண்டு இடம்பெறவுள்ள தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
கடந்தாண்டு இடம்பெற்ற வர்த்தக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில், ஸ்ரீ லங்கா டெலிகொம் அணி சம்பியன் பட்டத்தையும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டிருந்தன.
5 hours ago
7 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
18 Nov 2025