2025 ஜூலை 17, வியாழக்கிழமை

30 வருடங்களின் பின் காங்கேசன்துறையில் கூடைப்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 21 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். காங்கேசன்துறையில் கடந்த 30 வருடகால இடைவெளியின் பின்னர் மீண்டும் கூடைப்பந்தாட்டப் போட்டியொன்று நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ்.  மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் செ.ரமணன் தலைமையில்  யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட அணியும் காங்கேசன்துறை கடற்படை அணியும் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு மோதவுள்ளன.

கடந்த காலத்தில் காங்கேசன்துறைப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த நிலையில் அங்கு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது அந்தப் பகுதியிலுள்ள ஒரு சில இடங்களில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடைப்பந்தாட்டப் போட்டி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X