2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

நவீன வசதிகளுடன் நூல் நிலையம் அமைக்கக் கோரிக்கை

Kogilavani   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)
 
புத்தளம் மாவட்டத்திலுள்ள ஒரேயொரு தமிழ் கிராமமான   உடப்பு கிராமத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு நூல் நிலையம் அமைக்கப்படவில்லை என உடப்பு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
உடப்பு  கிராமத்திலுள்ள ஆறாம் வட்டாரத்தில் முன்பு  ஒரு நூல் நிலையம்     காணப்பட்டது. அது சேதமடைந்து முற்றாக காணாமல் போய் விட்டது.  அதன் பின்பு ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் உடப்பு உப காரியாலத்தில்  ஒரு பகுதியில் நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.     இங்கு போதுமான இட வசதிகள் இல்லாததால் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர். 

எனவே, உடப்பு கிராமத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய நூல் நிலையம் ஒன்றினை அமைத்து தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .