2025 மே 01, வியாழக்கிழமை

கொரோனாவால் வைத்தியர் உயிரிழப்பு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலிகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ரணத் பத்ம சாந்த, கொரோனா தொற்றுக்குள்ளாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளார்.

கேகாலை கலிகமுவவிலுள்ள அம்பன்பிட்டிய கிராமத்தில் வசிக்கும் ரணத் பத்மா சாந்த (வயது 54) இரண்டு குழந்தைகளின் தந்தையவார். 

கலிகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய அவரின் மனைவியும் கேகாலை பொது மருத்துவமனையில் வைத்தியராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .