Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்திய சர்வதேச சகோதரிகள் தினம் கொழும்பு-13, புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் வளாகத்தில் ஞாயிறன்று (03) மிகச் சிறப்பாக நடை பெற்றது .
இதன்போது அமைப்பின் தலைவி ரஞ்சனி சுரேஷ் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அமைப்பின் ஸ்தாபகர் ராதா மேத்தா சிறார் காப்பகங்களுக்கான உடை மற்றும் அத்தியாவசிய அவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தார்.
இவை மட்டக்குளியில் உள்ள மெளசெவன சிறுவர் இல்லம் மற்றும் வத்தளை கோகுலம் சிறுவர் நிலையம் என்பனவற்றிற்கு வழங்கப்பட்டன.
பிரதம நிர்வாகத்தின் தலைவர் ஷண்மு மற்றும் மகளிர் அணி செயலாளர் பிரியதர்ஷினி பாடசாலைகளுக்கான நூல்கள் வழங்கினர். இவை இரத்தினபுரி நிரியெல்லை தமிழ் வித்தியாலயம் மற்றும் பசறை சைவ பிரகாசம் தமிழ் வித்தியாலயம் என்பனவற்றிற்கு வழங்கப்பட்டன.
திருமதி ஆனந்தி குறும்படக் கதை சொல்லும் நிகழ்வில் பங்கேற்று கதை சொன்னார். கலை நிகழ்ச்சிகளும்
இடம்பெற்றன.நிகழ்ச்சியை மகளிர் அணியின் பொருளாளர் உஷா கெனடி தொகுத்து வழங்கினார்..
15 minute ago
24 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
34 minute ago