2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஜமேக்காவிலிருந்து இலங்கை வந்த கொக்கெய்ன்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜமேக்காவிலிருந்து  தனிபட்ட அன்பளிப்பாக தபால் மூலம்  இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு தொகை கொக்கெய்ன் போதைப் பொருள் சீதுவ பிரதேசத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

 சீதுவ பிரதேசத்திலுள்ள colombo cargo enterprice  பொதிகள் விநியோக  தனியார் நிறவனத்திடம் இருந்து,  சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுபாட்டு பிரிவின்  அதிகாரிகளால் நேற்று (27) கைப்பற்றப்பட்டுள்ளதென சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்க பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியைச் சேர்ந்த 44 வயதுடைய சுற்றுலா வழிகாட்டி ஒருவரின்  பெயருக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த பொதியானது, அவருக்கு முன்பாகவே திறந்துபார்க்கப்பட்டதாகவும் இதன்போது அப்பொதியில் 25இலட்சம் ரூபாய்பெறுமதியான 95 கிராம் பெறுமதியான கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,

 2 வாரங்களுக்கு முன்னர்  குறித்த பொதி அந்த நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர். 

இதனையடுத்து பொதியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,அவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X