R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்வாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறு கோடிக்கும் அதிகமான பெறுமதி உடைய சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட மருந்து வில்லைகளை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட மீன்வாடிக்குள் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொதிகளை ஆராய்ந்து பார்த்த போது அதில் புற்று நோய்கள் மற்றும் ஏனைய நோய் நிவாரண மருந்து வில்லைகள் காணப்பட்டதாகவும்.
இதன் பெறுமதி நூறு கோடிக்கும் மேல் இருக்கலாம் என்பதுடன் இந்த மருந்து வில்லைகள் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்
7 minute ago
16 minute ago
26 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
26 minute ago
29 minute ago