Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 29 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், பாலாவி- கற்பிட்டி பிரதானவீதியின் நாவல்காடு பகுதியில் சனிக்கிழமை (28) அன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்,காயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழி உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லொறியொன்று, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் மீது பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு, துன்ஹல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய தாரககவிஷ்கதென்னகோன் எனும் சிறுவனும், 72 வயதுடைய ரணசிங்க மகள்எனும்இரண்டுபிள்ளைகளின் தந்தையே இந்தவிபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்தனர்.
இவர்கள் பயணித்த பேருந்து நாவக்காடு பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது,பாலாவிபகுதியில் இருந்து நுரைச்சோலை பகுதியை நோக்கி கோழி உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த மினி பஸ் மீது மோதியுள்ளது.
இதன் போது குறித்த மினி பஸ் வீதியில் இருந்து இழுத்து செல்லப்பட்டு, வீதியோரத்தில் உள்ள வடிகானுக்குள் சரிந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேருந்து வீழ்ந்த வடிகானுக்குள் நீர் காணப்பட்ட போதிலும், பேருந்துக்குக்குள் இருந்தவர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேறியதாகவும் விபத்து இடம் பெற்ற போது குறித்த தனியார் பேருந்தில் 15 இற்கும் அதிகமானவர்கள் பயணம் செய்துள்ளதாகவும், இதில்10 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
4 hours ago