2025 ஜூலை 14, திங்கட்கிழமை

“பெண்களுக்கான கடமையை நிறைவேற்ற வேண்டும்“

R.Tharaniya   / 2025 மே 08 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணையகம் இலங்கை உள்ளுரதிகார சபைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில், தாமதமின்றி  சட்டப்பூர்வமாக பெண்களுக்கு கிடைக்கக் கூடிய உறுப்பினர்களுக்கான 25 சத விகித சட்டபூர்வ ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யும் செயல்முறையை தொடங்க வேண்டும்.

என நாட்டிலுள்ள 34 தன்னார்வ அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.இது தொடர்பாக  தேர்தல் ஆணையகத் தலைவருக்கும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் தன்னார்வ அமைப்புகள் கையெழுத்திட்டு கூட்டாக அனுப்பி வைத்துள்ள அவசர வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இம்முறை இடம்பெற்ற உள்ளுரதிகார சபைத் தேர்தலில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை இருந்தபோதிலும், பிரச்சாரம் செய்தல், வாக்களித்தல், போட்டியிடுதல் இருப்புப் பட்டியல்களில் இடம் பெறுதல்  ஆகிய  தேர்தல் செயன்முறையின் அனைத்து அம்சங்களிலும் - பெண்கள் வெளிப்படையாகவே தீவிரமாக இருந்தனர்.

முந்தைய உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பல அனுபவம் வாய்ந்த பெண்கள், கட்சி ஒப்புதல் மூலம் மறுக்கப்பட்டபோது இம்முறை அவர்கள் சுயாதீனமாக போட்டியிட்டனர்.இந்தத் தேர்தலில் பெண்கள் வாக்குகளைப் பெறுவதிலும், உள்ளூர் அரசியலில் மீண்டும் நுழைவதில் நம்பிக்கைக்குரிய அதிகரிப்பைக் குறிக்கிறது.

இருப்பினும், பல சிறிய கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால், “ஒவ்வொரு மூன்று இடங்களுக்கும் ஒரு பெண்" எனும் தேவையை நிறைவேற்றுதல் மிகவும் சிக்கலாக்கியுள்ளது.

கடந்த கால போக்குகள், வரம்பு பூர்த்தி செய்யப்பட்டாலும் கூட, பெண்களை பரிந்துரைக்க கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன, மேலும் முந்தைய தேர்தல்களில், சில உள்ளூர் அதிகாரிகள் 25 சதவிகித  ஒதுக்கீட்டை முழுவதுமாக வழங்கத்  தவறிவிட்டனர்.

உள்ளூர் அதிகார சபை தேர்தல்கள் சட்டத்தின் 2017 திருத்தத்தின்படி, தேர்தல் ஆணையம், 25 சதவிகித  பெண்களுக்கான ஒதுக்கீடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளது.இதில், முதல்-பின்-பதிவு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத பெண்களுக்கு ஈடுசெய்ய விகிதாசார பிரதிநிதித்துவ பட்டியலைப் பயன்படுத்துவதும் அடங்கும்.

ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் இளம் பெண்கள் உட்பட குறைந்தது 25 சதவிகிதம்  பெண்கள் இருப்பதை உறுதி செய்வது எனும் இணக்கப்பாட்டை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும்.

ஒரு கட்சி இரண்டு இடங்களைப் பெறும் சந்தர்ப்பங்களில், குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்கு பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்த முடியும், வலியுறுத்த வேண்டும்.

ஒதுக்கீட்டை நிறைவேற்றத் தவறிய அரசியல் கட்சிகள் பகிரங்கமாக பொறுப்பேற்க படச் செய்ய  வேண்டும்.பெண்களுக்கான 25 சதவிகித ஒதுக்கீடு அமுல்படுத்துவது, உள்ளூர் நிர்வாகத்தில் பாலின பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவது தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ நெறிமுறைக் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

” என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 21.80 சதவீதமாக அமுல்படுத்தப்பட்டது என்றும் அது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும்

25 சதவிகிதம் என்ற நடைமுறையை முழுமையாக அமுலாக்க வில்லை என்பதையும் கவனத்திற் கொண்டு  இம்முறையும் அவ்வாறே புறக்கணிக்க படுமாயின், இது விடயமாக அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்றம் செல்ல தயார் செய்வதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஸ்தாபகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷிரீன் ஷரூர் தெரிவித்தார்.

.எச்.ஹுஸைன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .