2025 மே 01, வியாழக்கிழமை

மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் சிக்கியது

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி ஏத்தாளைப் பகுதியில் மிகவும் சூட்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 1026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,  இதன்போது நான்கு பேர் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர்  நேற்று  (05) மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

 சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட இரண்டு படகுகளைக் கடற்படையினர்  பரிசோதனை செய்தபோதே  மிகவும் சூட்சகமான முறையில் 31 உரமூடைகளில் பொதி செய்யப்பட்ட 1026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .