2025 மே 01, வியாழக்கிழமை

மஹிந்த பதவியேற்று ஓராண்டு பூர்த்தி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆசீர்வாதம் வேண்டியும் இன்று (09) இந்தியாவிலுள்ள சாரநாத் மூலகண்டி குடி விகாரையில் சிறப்புப்  பூஜை இடம்பெற்றது.

 'இலங்கை - இந்திய ஆசீர்வாத பூஜை' நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையிலிருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டார்.

இந்திய மஹா போதி சங்கத்தின் தலைமையில் இந்திய - இலங்கை நட்புறவு சங்கம் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த விஷ்வ ஆசீர்வாத பூஜையை ஏற்பாடு செய்திருந்தன.

இந்திய மஹா போதி சங்கத்தின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய பெலவத்த சீவலி தேரரின் அறிவுரை அனுசாசனத்திற்கமைய இடம்பெற்ற இந்த விசேட இலங்கை - இந்திய ஆசீர்வாத பூஜை நிகழ்வில் இந்திய மஹா போதி சங்கத்தை சேர்ந்த அனைத்து விகாரைகளும் இணைந்து கொண்டன.

அதற்கமைய இந்திய மஹா போதி சங்கத்தின் சாரநாத், லும்பினி, கொல்கத்தா, லக்னவ் மற்றும் புத்தகயா விகாரைகளிலிருந்து மஹா சங்கத்தினர் இந்த ஆசீர்வாத பூஜையில் பங்குபற்றினர்.

குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு.கோபால் பாக்லே உள்ளிட்ட இரு நாடுகளினதும் உயர் ஸ்தானிகராலாய பிரதானிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .