2025 மே 01, வியாழக்கிழமை

வேலைவாய்ப்புகளுக்கு புதிய உபாயம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் உள்ள அரச தொழிற்பயிற்சி நிலையங்களின் கூரைகளில் சூரிய ஒளித்தகடுகளை (சோலார் பேனல்) நிறுவும் திட்டம் நடந்து வருவதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், தெரிவுசெய்யப்பட்ட 100,000 வீடுகளில் தலா 5 கிலோவோற் திறன் கொண்ட சூரிய ஒளித்தகடுகள் நிறுவப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

சூரிய ஒளித்தகடு திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நாட்டில் போதுமான தகுதியானவர்கள் இல்லாததால், தொழிற்பயிற்சி நிலையங்களில் 'சோலா தொழிநுட்பவியலாளர்' என்ற பாடத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .