2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

MMCA இலங்கையின் இடமாற்றம்

R.Tharaniya   / 2025 ஜூன் 30 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருங்காட்சியகத்தின் வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை அடையும் நோக்கில்,நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகமானது (MMCAஇலங்கை), அதன் தற்காலிக வளாகமான க்ரெஸ்கட் புலவார்ட் கொழும்பு 3இலிருந்து இடம் மாறப் போகிறது என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். 

நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கையின் முதலாவது நிரந்தர
அருங்காட்சியகத்தைத் திறப்பதற்கும், இயக்குவதற்கும் அதற்கான
பணியாளர்களை நியமிப்பதற்கும் தேவையான திட்டமிடல், பயிற்சி மற்றும்
நிகழ்ச்சித்திட்டங்களை இந்தப் புதிய கட்டம் துரிதப்படுத்தும். கலை சமூகம்
மற்றும் பாடசாலைகளுடன் MMCA இலங்கைக்குள்ள ஈடுபாட்டை எதிர்வரும்
காலங்களில் அதிகரிக்க ஆர்வமாக உள்ளோம்.

 அருங்காட்சியகங்கள் இன்றைய உலகில் வகிக்கும் பங்கினைக் குறித்து இதன் மூலம் இன்னும் அதிகமானோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, அருங்காட்சியகத்தின் எதிர்கால
நிகழ்ச்சிகளுக்காக ஆவலுடன் காத்திருங்கள்.

“அடி மட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட MMCA இலங்கையானது, குறுகிய
காலத்தில் முன்னோடியான ஒரு கலாச்சார நிறுவனமாக வளர்ந்துள்ளது,”
என்று MMCA இலங்கை செயற்குழுவின் தலைவரான அஜித் குணவர்தன
கூறினார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் MMCA இலங்கை சாதித்துள்ளஅனைத்துக்கும் எமது குழுவின் தளராத அர்ப்பணிப்பு, அனைத்துஆதரவாளர்களினதும் தாராள மனப்பான்மை, மற்றும் பொதுமக்களின் ஆர்வம்ஆகியவையே பங்களித்துள்ளன.

அத்துடன், பொதுமக்களின் தொடர்ச்சியானஈடுபாட்டினால் இத்தகைய அருங்காட்சியகத்தின் அவசியம்உறுதிசெய்யப்படுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.2019 ஆம் ஆண்டில் MMCA இலங்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து
பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு

பாடத்திட்டம் சார்ந்த செயற்பாடுகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்
என மும்மொழிகளிலும் இலவசமாக வழங்குகிறது; இவ்வகையில்,
அருங்காட்சியகக் கற்றல் மற்றும் அணுகுத்திறன் ஆகியவற்றில் MMCA
இலங்கை முன்னணியில் உள்ளது.

அருங்காட்சியக வளர்ச்சியின் அடுத்தகட்டமாக, MMCA இலங்கையின் குழுவை வளர்த்தல், பயிற்சி முயற்சிகளுக்குமுன்னுரிமை வழங்குதல், கூட்டாண்மைகளை உருவாக்குதல்போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும். அது மட்டுமன்றி, உள்ளூர் மற்றும்சர்வதேச கலைஞர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருடன் உரையாடி,அருங்காட்சியகத்தின் தொகுப்புக்கள் மற்றும் எடுத்தாளுமை திட்டங்களைக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளிலும் முக்கியம் செலுத்தப்படும்.

“இவ்வாறான இலக்கைக் கொண்ட பாரியளவிலான முன்முயற்சியை
கருத்துருவிலிருந்து நிறைவு வரை கொண்டுசெல்வது மக்களையே
எப்போதும் சார்ந்திருக்கும்,” என்று MMCA இலங்கையின் தலைமை
எடுத்தாளுனர், ஷாமினி பெரெய்ரா கூறினார்.

“இலங்கையில் இவ்வகையானமுதல் அருங்காட்சியகமாக MMCA இலங்கை திகழ்வதனால், நாட்டில் முன்புஇல்லாத நடைமுறைகள், பாத்திரங்கள் மற்றும் தொழில் தேர்வுகளைநிறுவுவதன் மூலம், ஒரு புதிய நிறுவன முன்னுதாரணத்தை
நிலைநாட்டுகிறது. 

திறமைவாய்ந்த கலாச்சார தொழில்நடத்துநர்களைக்கொண்ட ஒரு புதிய தலைமுறையைப் பயிற்றுவிப்பதில் முதலீடு செய்வதன்மூலம், எமது நாட்டின் அருங்காட்சியகத் துறையின் எதிர்காலத்தை நாங்கள்வடிவமைக்கிறோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA
இலங்கை), கல்வியை முதன்மைப்படுத்தும் ஒரு முன்முயற்சியாகும்.
பொதுமக்கள், பாடசாலைகள், மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும்
இன்பத்திற்காக, நவீன மற்றும் சமகால கலைகளின் காட்சி, ஆராய்ச்சி,
சேகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது
அருங்காட்சியகத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக உள்ளது.

அருங்காட்சியகத்தின் கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப்
பற்றிய தகவல்களைப் பெறவும், அருங்காட்சியகத்தைப் பற்றி மேலும் அறிந்து
கொள்ளவும், அருங்காட்சியக வலைத்தளமான www.mmca-srilanka.org இல்,

அல்லது முகநூலில் The Museum of Modern and Contemporary Art Sri Lanka அல்லது
இன்ஸ்டாகிராமில் @mmcasrilanka என்ற தலைப்பில் இணையுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .