Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 பெப்ரவரி 25 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மகுடம் காலாண்டு சஞ்சிகையின் வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இச்சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் க.மகேசன், சிறப்பு விருந்தினர்களாக மட்டு. மாநகர ஆணையாளர் க.சிவநாதன் மற்றும் மட்டு. மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்டேர் கலந்துகொண்டு சஞ்சிகையினை வெளியிட்டு வைத்தனர்.
வி.மைக்கல் கொலின் ஆசிரியராக இருந்து வெளிவரும் இச்சஞ்சிகையின் முதற் பிரதியினை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
இந்நூல் வெளியீட்டுவிழாவில் சிறப்புரையினை பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு ஆற்றியதுடன் அறிமுக உரையினை கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா நிகழ்த்தினார்.
மட்டக்களப்பில் இருந்து சமூக, அரசியல், பொருளாதாரம், கலை மற்றும் இலக்கியம் சார்ந்த பல்சுவை கலாண்டு சஞ்சிகையாக இந்நூல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
30 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
31 minute ago