2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வட இலங்கை சங்கீத சபையின் பட்டமளிப்பு விழா

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வட இலங்கை சங்கீத சபையின் 18ஆவது பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை (03) பிற்பகல் ஒரு மணிக்கு மருதனார் மடத்திலுள்ள வட இலங்கை சங்கீத சபையின் தற்பரானந்தன் கலை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வட இலங்கை சங்கீத சபையின் தலைவரும் யாழ். கல்வி வலய கல்விப் பணிப்பாளருமான ஆர்.உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வின்போது நிர்வாக சபை உறுப்பினர்களின் கலாபூஷணம் விருது பெற்றவர்களும் கலைஞர்களும் கௌரவிக்கப்படவுள்ளதுடன்,  பட்டமளிப்பும் நடைபெறவுள்ளன.

இதில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கம், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி  அஜந்தா கேசவராஜா, கௌரவ விருந்தினராக வலிகாமம் கல்வி வலய முன்னாள் உதவி கல்விப் பணிப்பாளர்  அனந்தி சிவஞானசுந்தரம் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .