2021 மே 06, வியாழக்கிழமை

கனவிலும் அழியாச் சின்னம் - நூல் வெளியீடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்

சமூக நல கலைக்கலா மன்றத்தின் 23 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு கலைஞர் கிண்ணியா ஐதுரூஸ்-ஏ ஹஸன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு மற்றும் கலைஞர் கௌரவிப்பு வைபவம் ஞாயிற்றுக்கிழமை(6) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது.

காலாபூசணம் கலாநிதி கே.எம்.எம்.இக்பால் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை அதிபர், எஸ்.முகம்மதுவும், நூல் அறிமுகத்தை கலாபூசணம் ஏ.எம்.எம்.அலியும், நூல் நயவுரையை (சட்டத்தரணி) கவிஞர் எம்.சீசபறுள்ளாவும் ஆற்றினர்.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், முன்னாள் கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் எச.;எம்.எம்.பாயிஸ்;, கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .