2025 நவம்பர் 22, சனிக்கிழமை

கூத்து எனும் தனி ஓவியக் கண்காட்சி

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்சக்திவேல், அனாம்
, தேவ அச்சுதன்

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் தற்காலிக விரிவுரையாளரும், ஓவியருமான வே.ஹோகுலரமணனின் முதலாவது கூத்து எனும் தனி ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை (5) மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி.கிட்ணம் கோவிந்தராஜா, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி க.பிறேம்குமார், சிறப்பு விருந்தினராக பேராசிரியர் சி.மௌனகுரு ஆகியோர் கலந்துகொண்டனர்.  

இவர் இதற்கு முதல் பல ஓவியக் கண்காட்சிகளை இலண்டன், கொழும்பு, மட்டக்களப்பு போன்ற இடங்களில் பல ஓவியர்களுடன் இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X