Princiya Dixci / 2015 மார்ச் 23 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தின் வரலாற்றைக் கொண்ட பொத்துவில் வரலாற்றுப் பொக்கிஷம் பகுதி ஒன்றின் "சுவடிக்கூடம்" நூல் வெளியீட்டு விழா, அல்-பஹ்றியா வித்தியாலத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.
நூலாசிரியர் எம்.எஸ்.எம்.றிபாய்ன் இந்நூல் வெளியீட்டு விழா சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஆதம்லெவ்வை தலைமையில் நடைபெற்றது.
எம்.ஐ.எம்.அப்துல் கையூம் நூலின் தொகுப்பினையும் ஆய்வுரையை கலையன்பன் அப்துல் அஸீஸூம் வழங்கினர்.
நூலின் முதற்பிரதியை மீரா லெவ்வை போடியார், முகைடீன் பிச்சை ஹாஜியார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பொத்துவில் கலைவான் கழகம் ஏற்பாட்டில் பொத்துவில் நெற் ஊடக அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸித், பிரதேச சபை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், இளைஞர்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.



1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago