2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

9 பேருக்கு இலக்கிய சிப்பிகள் விருது

Kogilavani   / 2014 மே 12 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் 9 பேர் புத்தளம் தமிழ் மொழி எழுத்தாளர் சங்கத்தினால் இலக்கிய சிப்பிகள் என கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு சிப்பிகளால் வடிவமைக்கப்பட்ட நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய புத்தளம் சமூக மறுசீரமைப்பாளர் அமைப்பு நடத்திய கைவேலைப்பாடு பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போதே புத்தளம் தமிழ் மொழி எழுத்தாளர் சங்கத்தினால் எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதன்போது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ் மூத்த ஊடகவியலாளர்களும் கலைஞர்களுமான கலாபூஷனம், தேச கீர்த்தி, சமூக சுடர் எம்.ஐ.எம்.அப்துல் லதீப், கலாபூசனம் ஏ.எஸ்.புல்கி, தேச கீர்த்தி எச்.எம். சுகைப் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்நிகழ்வின் போது பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .