Sudharshini / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலம் மாறுமென்று
கடும் தவமிருக்கின்றனர் மகாசனங்கள்
இனத்தை தாண்டிய
மனித வயிற்று பசியின் வலி
சிந்திக்கவும் செய்கிறது
நிறம் மாறும் என கனவு கண்டு
நிலைமாறாது போன
காலமாகிவிட்டது
மன்றத்தில் வைக்கப்பட்ட உண்டியலில்
புண்ணியங்கள் தேடவும்
செய்த பாவங்கள் கழுவிவிடவும்
இடப்பட்டவைகள்
எல்லாம் ஒன்றாகிவிட்டன
பெருசுகள் பரிசுபெற
சிறிசும் இளசும் கவனிப்பாரின்றி
போகும்
நிறங்களுக்கு இடப்பட்ட சண்டைகளில்
காயங்களுடன் உறவுகள் முறிந்தன
மகாசனங்கள் காத்துக்கிடக்க
மாற்றம் ஏமாற்றமானது
-எஸ்.பி.பாலமுருகன்
29 minute ago
39 minute ago
40 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
39 minute ago
40 minute ago
43 minute ago