2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

தைத்திருநாள்

Kogilavani   / 2015 ஜனவரி 14 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழர்கள் வாழ்வில் தலைசிறந்தநாளாம் தைத்திருநாள்
தமிழர் வாழ்வோடிணைந்ததமிழனின் திருநாள்
தைமகள் உதித்தால் மனையெல்லாம்
மகிழ்வுபொங்கும் பெருநாள்
அதுவேஎம் திருநாள்
 
உழவர்களுக்கொரு திருநாள் இது
உலகினில் முதல் திருநாள்
உழைக்கும் உழவர்கள் உவந்தேற்றும் திருநாள்
சூரியபகவானுக்கு இது நன்றிசொல்லும் திருநாள்
 
சகலரும் இணைந்திடும் திருநாள்
தமிழர்களின் தைதிங்கள்  முதல் நாள்
உடலெங்கும் புத்துணர்ச்சிதரும் நாள்
உளமெங்கும் புது எழுச்சி பூத்திடும் நாள்
 
புதுப்பாணையில் புத்தரிசி இட்டு
புதுமையாய் பொங்கலுமிட்டு
புதுவாழ்வைநாம் தொடங்க
சூரியபகவானைபோற்றுதல் செய்திடும் திருநாள்
இதுநன்றியின் பெருநாள்;
 
வயலும்  வாழ்வும் செழிக்க
சுற்றமும் சொந்தமும் கூடி பேதங்கள் மறந்து
வாழ்வில் வளம் பெற
தைத்திருநாள் தமிழர்கள் வாழ்வில்
வளங்களைச் சேர்க்கட்டும்.

-சைவப்புலவர் எஸ்.ரி.குமரன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .