Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 09 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூங்கில் மரங்கள் காற்றில் அசைந்து
மோகனம் இசைக்கும் சோலை,அங்கு
ஓங்கி வளர்ந்த மரங்களில் எல்லாம்
உரமாய்ப் பரந்திட்ட கிளைகள்,அந்தப்
©ங்கா முழுவதும் மலர்கள் ©த்து
புன்னகை சிந்திடும் அழகு,அவற்றைத்
தாங்கி நிற்கும் நிலத்தில் அ©ர்வ
தாவர வர்க்கத்தின் பல இனங்கள்.
காலைப் பொழுதில் ஓர்நாள் எங்கும்
கனன்று எரிந்தது நெருப்பு,அந்தச்
சோலைக் குள்ளே தீயின் நாக்குச்
சுவாலை உயரக் கண்டு,அங்கு
சாலையில் சென்ற மக்கள் சேதியை
தீ அணைக்கும் படைக்குச் சொல்ல
வேலை வந்தது என்றே அவர்கள்
விரைந்து வந்தனர் கடமை செய்ய.
கருநாக்கின் தீயை அணைத்து,©ங்
காவைக் காத்திட்ட பின்பும்,அதன்
ஒருபகுதி அழிந்து போன சோலை
அழகு இழந்ததைக் கண்ட அவர்கள்
பெருமூச்சு உதிர்த்து மேலே பார்க்க
பெரிதாய் விரிந்தது விழிகளில் அக்காட்சி
புருவங்கள் எல்லாம் உயர்ந்து,அந்தப்
புதுமை கண்டு இமைக்க மறந்தன.
விண்ணைத் தொட்டு நின்ற அந்த
வீரிய மரத்தின் உச்சிக் கூட்டினுள்
வண்ணச் சிறகினை பரப்பி விரித்த
விசால பெரிய பறவை, தீயின்
கண்ணியில் சிக்கி கைதி ஆனதோ?
காத்திட வேண்டும் உயிரை,என்றவர்
எண்ணிய படியே உச்சிக்கு ஏறி
எட்டிப் பார்த்து அதிர்ந்து போனார்.
குஞ்சுகள் நான்கு உயிரோடு இருக்க
கூட்டினை மூடி சிறகினை விரித்து
பிஞ்சினைக் காத்திட்ட பிரிய தாயின்
பெரிய விசால சிறகும் உடலும்
கொஞ்சிய தீயின் நாக்குகள் பட்டு
குரூரமாய் எரிந்து கருகிப் போக
நெஞ்சை உருக்கி நெகிழ்த்த தாய்க்கு
நீண்ட நேரமாய் உயிரே இல்லை.
தன்னுயிர் காத்திட எண்ணி இருந்தால்
தாய்ப் பறவைக்கு ஒருநொடி போதும்
அன்னையின் மனது அற்பமே அல்ல
அதனால் அதற்குச் சம்மதம் இல்லை.
இன்னுயிர் ஈந்து குஞ்சுகள் காத்திட்ட
இந்தப் பறவை எனக்கும் தாயே.
மண்ணில் அன்னை மகத்துவம் இதுவே
மறந்திட வேண்டாம் மனிதப் பிறப்பே.
ஜெயசீலன்
கண்டி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago