Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 04 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்லவி
நேர்வழி வாழ் மனமே – உன்னைத்
தீண்டிடும் தீமைகள் அகன்றிடும் நிஜமே
நேர்வழி வாழ் மனமே
அனுபல்லவி
வேதனை வாசலை மூடிடும் தியானம்
வேறெனும் உளநோயை போக்கிடும் தியானம் (நேர்வழி)
சரணம்
1. வேதத்தின் கொள்கையை வீசிவிடாதே
வேஷத்தை நம்பி வீழ்ந்துவிடாதே
மாயையை நம்பி மருண்டுவிடாதே
மாநபி வார்த்தையை மறந்துவிடாதே (நேர்வழி)
2 காலத்தில் கட்டுண்ட கனவொத்தவாழ்வு
காலனின் கடமையால் கலைந்திடும்போது
தேடிய பணம் புகழ் பலனளிக்காது
பாதையை புரிந்து பின் பண்போடுவாழு (நேர்வழி)
3. உள்ளத்தில் போராடி உண்மையை இருத்து
உண்மைக்கு மாறான போக்கினை நிறுத்து
உத்தமர் வாழ்விiனை உதாரணம் கொண்டு
உத்தமபுருடனாய் உலகிலே வாழு (நேர்வழி)
4. தீயவருறவுன்னைத் தீ நரகோட்டம்
தீயதை நன்மை போல திசை மாற்றிக் காட்டும்
நல்லவருறவு நற்பயன் நல்கும்
நாயனின் பாதையில் நலமாகச் சேர்க்கும் (நேர்வழி)
ஷெய்ஹூல் முப்லிஹீன் எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் (றஹ்)
9 minute ago
33 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
33 minute ago
39 minute ago