Janu / 2025 நவம்பர் 26 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில், தேவாலயத்திற்கு அருகாமையில், இன்று இரவு 2 மணியளவில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்று அழுத்தத்தால் பாரிய மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே விழுந்துள்ளது.
இதனால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டு, மின்சாரம் தடைப்பட்டு பொது மக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன், தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்களின் உடனடி பணிப்புரைக்கிணங்க, அக்கரைப்பற்று மாநகர பிரதி முதல்வர் யூ.எல். உவைஸ், மாநகர சபை உறுப்பினர்கள் ஏ. கே. பாஹிம், நுஃமான், ஹனீப், அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்பு பிரிவு, மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், இவர்களுடன் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர், அக்கரைப்பற்று மின்சார சபையினர், அக்கரைப்பற்று பொலிஸார், பொதுமக்கள் என அனைவரும் நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை இணைந்து செயல்பட்டு, மரத்தை அகற்றி, வீதி போக்குவரத்து மற்றும் மின்சாரம் மீள செயல்படுத்தும் பணிகளை நிறைவேற்றியுள்ளனர்.
இது போன்ற அவசர நிலைகளில் மக்கள் நலனுக்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்ட இந்த நிகழ்வு, மாநகர செயற்பாட்டின் ஒரு முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுகிறது.
நூருல் ஹுதா உமர்

8 hours ago
9 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
14 Jan 2026