2025 ஜனவரி 25, சனிக்கிழமை

ஆரையம்பதி விபத்தில் மூவர் படுகாயம்

Editorial   / 2025 ஜனவரி 10 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்  

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் வியாழக்கிழமை (09)இடம் பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

இதில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X