Janu / 2025 நவம்பர் 19 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பகுதியில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் புதன்கிழமை (18) அன்று கரையொதுங்கியுள்ளது.
அதனை அப்பகுதி மக்கள் பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மீன் சுமார் 3 முதல் 4 அடி வரையான நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள அடை மழை வெள்ளப்பெருக்கு கடல் கொந்தளிப்பால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கடலாமைகள் டொல்பின் மீனினம் என பலவகை கடல்வாழ் உயிரினங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளதனால் கடலை நோக்கி ஆற்று வாழைகள் சல்பீனியாக்கள் சென்று கடற்கரையில் தேங்கி காணப்படுகிறது.
பாறுக் ஷிஹான்


36 minute ago
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
54 minute ago
59 minute ago