2025 நவம்பர் 19, புதன்கிழமை

இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 14 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணை பெற்றுத்தருவதாக கூறி   நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில்  பொலிஸ் உத்தியோகத்தரை வியாழக்கிழமை (11) அன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட காரைதீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க பொலிஸ் உத்தியோகத்தர் தன்னிடம்  ரூபா 10 000 இலஞ்சம்  கோருவதாக  பொது போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபட்ட நபர் அண்மையில்   கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான  வியாழக்கிழமை(11)அன்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்   கூறியமைக்கு அமைவாக  இலஞ்சப் பணத்தை காரைதீவு பொலிஸ் நிலையத்தில் வைத்து அந்நபர் வழங்கியுள்ளார்.


இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்  இலஞ்ச பணத்தை  வாங்கும் போது   கைது செய்தனர்.

மேலும் அம்பாறை மாவட்ட காரைதீவு  பொலிஸ் பிரிவில்  பொது போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபட்ட  சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த நபரிடம் இருந்து  வாகன சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்யாமல்  அவற்றை மீள தருவதற்கு  குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்   அந்த நபரிடமிருந்து ரூபா 10000 இலஞ்சம் கோரியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைதான சந்தேக நபரை வெள்ளிக்கிழமை(12) அன்றுசம்மாந்துறை  நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கு   இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X