2025 நவம்பர் 19, புதன்கிழமை

உரம் இடுவதற்கு சென்ற விவசாயி திடீர் மரணம்

Janu   / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை உரம் (கோழி எரு) இடுவதற்கு வயலுக்கு சென்ற  நிலையில் நெஞ்சு வலி  ஏற்பட்டு உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை(7)  மாலை  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சம்மாந்துறை மல் ஆறாம் வீதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க  அப்துல் மஜீத்  என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

மல்வத்தை   புதுக்காடு  பகுதியில் உள்ள காணியில் விவசாயம் செய்து வந்த நிலையில்  இயற்கை உரம்(கோழி எரு)  இடுவதற்கு அங்கு சென்ற போது குறித்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்மாந்துறை ஆதார  வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் இடைநடுவில்  அவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணமடைந்தவர் இருதய நோய்க்கு உள்ளான நிலையில் கடந்த காலங்களில் சிகிச்சை பெற்று  வந்தவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

பாறுக் ஷிஹான் 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X