2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

உர மூடைகளைக் கடத்திச் சென்ற இருவர் கைது

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் 350 உர மூடைகளைக்  கடத்திய இருவரை சம்மாந்துறை பொலிஸார் நேற்றுக் (07) கைது செய்துள்ளதோடு உரமூட்டைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய பல்லேகம பிரதேசத்தில் இருந்து  அம்பாறை மாவட்டத்தின்   நிந்தவூர் பிரதேசத்த்திற்கு எடுத்து செல்லப்பட்ட 350 உர மூடைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை   பொலிஸார்    மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட இருவரையும்   நீதிமன்றில் ஆஜர்படுத்த   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .